யாழ் நகரில் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு

பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published December 24, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரினால் யாழ் நகர் பகுதிகளில் நடாத்திய விசேட சுற்றிவளைப்பின் போது, நான்கு பேர் ஐஸ் போதைப் பொருளுடனும், ஐந்து பேர் போதை மாத்திரைகளுடனும், ஒருவர் கேரள கஞ்சாவுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டோரில் பாடசாலை மாணவனும் உள்ளடங்குவதாகவும் , கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *