விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் இந்திய வெளியுறவு அமைச்சர்!
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் தனது உத்தியோகப்பூர்வ
Published December 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கையை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை மேலும் உறுதிப்படுத்துவதே இந்திய வெளியுறவு அமைச்சரின் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.