கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது
கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published December 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் பொலிஸார் தீவிரமான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.