பாறையில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகெட்டிய - மீவனபலான வீதியின் கலுகஹேன
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகெட்டிய – மீவனபலான வீதியின் கலுகஹேன பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் மீவனபலான நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாறையில் மோதியதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயமடைந்தார்.
அவரை உடனடியாக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பெலவத்தை, மிரிஸ்வத்தையைச் சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரதேச அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.