டிசம்பர் 29 முதல் மழை அதிகரிப்பு : பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை.
எதிர்வரும் டிசம்பர் 29ஆம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளில் மழை நிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Published December 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எதிர்வரும் டிசம்பர் 29ஆம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளில் மழை நிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அதிகமாகப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய காலநிலை மாற்றங்களை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களை கருத்தில் எடுக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.