வைபவ் சூர்யவன்ஷி, இந்தியாவில் ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் உயரிய விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
14 வயதுடைய இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்தியாவில் ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் உயரிய விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருதை அவர் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கையால் பெற்றுக்கொண்டார்.
14 வயதுடைய இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்தியாவில் ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் உயரிய விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதை அவர் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கையால் பெற்றுக்கொண்டார்.
ராஷ்டிரிய பால் புரஸ்கார் என அழைக்கப்படும் இந்த தேசிய குழந்தைகள் விருது, கிரிக்கெட் விளையாட்டில் அவர் காட்டிய சிறப்பான திறமைகளுக்காக வழங்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பீகார் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அருணாசலப் பிரதேச அணிக்கு எதிராக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 84 பந்துகளில் 190 ஓட்டங்களை குவித்தார்.
இதன் மூலம், உலகின் இளைய List A சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
அவர் தனது சதத்தை வெறும் 36 பந்துகளில் நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.