வரலாற்றில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு

இலங்கை சுற்றுலா துறையில் புதிய மைல்கல்லாக, ஒரே ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த அதிகபட்ச வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (29) வரலாற்றுச் சாதனையாகப் பதிவாகியுள்ளது.

Published December 29, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை சுற்றுலா துறையில் புதிய மைல்கல்லாக, ஒரே ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த அதிகபட்ச வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (29) வரலாற்றுச் சாதனையாகப் பதிவாகியுள்ளது.

இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 2,333,797 ஆவது சுற்றுலாப் பயணியுடன் இந்தப் புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், இதுவரை அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்ட ஆண்டாகக் கருதப்பட்ட 2018 ஆம் ஆண்டின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 23,33,796 ஆக இருந்தது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *