பல பகுதிகளுக்கும் மழைக்கான வாய்ப்பு!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும்
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல முறை மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.