சிகிச்சை பெற வந்த கைதி துப்பாக்கி சூடு
நாகொடை வைத்தியசாலையில் இன்று காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...
Published December 31, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாகொடை வைத்தியசாலையில் இன்று காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த கைதி களுத்துறை சிறைச்சாலையைச் சேர்ந்த கைதி என பொலிஸார் தெரிவித்தனர்.சத்திர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதியின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது . கைதி அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.