எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் அறிவிப்பு.
இந்த மாதத்திற்குள் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதத்திற்குள் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தை நிலவரங்களை கருத்தில்கொண்டு எரிவாயு விலை உயர்த்தப்பட வேண்டிய தேவையிருந்தாலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இச்சமயம் விலை திருத்தம் செய்யப்படவில்லை என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690 ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 1,482 ஆகவும் மேலும் 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694 ஆகவும் உள்ளது.
இதனிடையே, நேற்று (01) முதல் அமலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 150 ஆல் உயர்த்தப்பட்டு புதிய விலை ரூ. 4,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 65 ஆல் உயர்த்தப்பட்டு புதிய விலை ரூ. 1,710 ஆக உள்ளது.
இதற்கிடையில், மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.