2026 கல்வியாண்டு இன்று ஆரம்பம்
2026 கல்வியாண்டின் முதல் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்கமைய அரச
2026 கல்வியாண்டின் முதல் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்கமைய அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்களில் இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2026 கல்வியாண்டின் முதல் தவணையின் முதல் கட்டம் தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வெளியான சுற்றுநிரூபத்திற்கமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை புதிய கல்வி மறுசீரமைப்பிற்கமைய முதலாம் வகுப்பிற்கென ஜனவரி மாதம் 29ஆம் திகதியும் 6ஆம் வகுப்பிற்கென ஜனவரி மாதம் 21ஆம் திகதியும் புதிய பாடதிட்டங்களை ஆரம்பிக்கும் செயற்பாடு இடம்பெறுமென கல்வியமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.
இதேவேளை 2026 கல்வியாண்டின் முதல் தவணையின் முதல் கட்டம் இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
திட்வா அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையின் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை ஜனவரி மாதம் 12ஆம் திகதியிலிருந்து நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.