ஜொன்ஸ்டனுக்கு FCID எச்சரிக்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று

Published January 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராக வேண்டுமென பொலிஸார் அவர் முன்னிலையாக தவறினால், கைது செய்ய நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதோச நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு லொரியை தவறாக பயன்படுத்தியதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சதோசவின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் இந்திக ரத்னமலல் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை வத்தளை நீதவான் நீதிமன்றம் ஜனவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹான் பெர்னாண்டோவும் கைது செய்யப்பட்டு ஜனவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *