ஹரிணுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாக ஹரிண் பெர்னான்டோ மீது
Published January 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாக ஹரிண் பெர்னான்டோ மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்கென அவர் இன்றைய தினம் பதுளை நீதிமன்றில் ஆஜரானார்.
இதன்போது வழக்கு மே மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தேர்தல் காலத்தில் பதுளை நகரில் ஊர்வலமாகச் சென்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி பதுளை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த போது கைதுசெய்யப்பட்ட ஹரிண் பெர்னாண்டோ, அன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.