சோமாவதிய – சுங்காவில வீதி போக்குவரத்து இடை நிறுத்தம்.
மகாவலி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சோமாவதிய - சுங்காவில பிரதான வீதியானது திக்கல பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதையடுத்து, இன்று (07) காலை 8.30 மணி முதல் குறித்த வீதியிலான வாகனப் போக்குவரத்தை இடைநிறுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மகாவலி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சோமாவதிய – சுங்காவில பிரதான வீதியானது திக்கல பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதையடுத்து, இன்று (07) காலை 8.30 மணி முதல் குறித்த வீதியிலான வாகனப் போக்குவரத்தை இடைநிறுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, நேற்று (06) மாலை வழிபாடுகளுக்காகச் சென்ற பக்தர்கள் சிலர் வெள்ளம் காரணமாகத் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, சோமாவதிய விகாரைக்குச் சொந்தமான வண்டி மூலம் அவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல விகாரையின் பிக்குகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.