சிரியா மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்!
சிரியாவில் செயற்பட்டு வரும் ஐளு பயங்கரவாதிகளின் பல இலக்குகள் மீது அமெரிக்க
Published January 11, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சிரியாவில் செயற்பட்டு வரும் IS பயங்கரவாதிகளின் பல இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதல் வரிசையொன்றை முன்னெடுத்துள்ளது.
IS பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாகவே இந்த வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க நேரப்படி நேற்று (10) நண்பகல் 12:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் சிவில் மொழிபெயர்ப்பாளர் மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.