யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Published January 11, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்கள், சவால் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தனங்கிளப்பு பகுதியில் கும்பல் ஒன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

பொலிஸாரை கண்டதும் , மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர். அவர்களில் இருவரை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.

அத்துடன் மணல் ஏற்றிய நிலையில் காணப்பட்ட இரண்டு டிப்பர் வாகனங்கள், இரண்டு உழவு இயந்திரங்கள், மற்றும் மண் அகழ்வுக்கு பயன்படுத்திய சவல் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தப்பியோடிய ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துளள்னர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *