10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published January 13, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இன்றைய தினம் அதிகாலை அத்துமீறல் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும், அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர , படகினை அங்கு தடுத்து வைத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *