மின்சாரம் தாக்கி தம்பதியினர் மரணம்

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹனுவல பகுதியில் நேற்று (13) மின்சாரம் தாக்கியதில்

Published January 14, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹனுவல பகுதியில் நேற்று (13) மின்சாரம் தாக்கியதில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் ஹனுவல, துல்ஹிரிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கணவனும் 58 வயதுடைய மனைவியும் ஆவர்.

விலங்குகளிடமிருந்து வயலைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கம்பியை இழுத்த குற்றச்சாட்டில், ஹனுவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *