கொஹுவல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – மூவர் கைது!

தெமட்டகொட மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் வைத்து குற்றச் செயலுடன்

Published January 16, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தெமட்டகொட மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் வைத்து குற்றச் செயலுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2025.12.30 அன்று இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்த சம்பவத்திற்கு ஆதரவு வழங்கிய மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27, 32 மற்றும் 35 வயதுடைய கொழும்பு 09 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இச்சம்பவம் குறித்து கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *