உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்

நுவரெலியா பிரதி முதல்வர் தலைமையிலான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்

Published January 18, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நுவரெலியா பிரதி முதல்வர் தலைமையிலான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்  இந்திய அரசின் வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  இன்று ஞாயிற்றுக்கிழமை 18.01.2026 இந்தியாவின் ஹதராபாத் நோக்கி பயணமானார்கள்.

இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாட்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இக்குழு இந்தியா செல்கிறது. 

இச் செயலமர்வில் இலங்கையிலிருந்து நுவரெலியா,பதுளை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இ.தொ.காவைச் சேர்ந்த மொத்தம் 20 உள்ளூராட்சி மன்ற உபத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி நிர்வாகத் திறன்களை மேம்படுத்துதல்இ மக்கள் சேவை செயல்திறன் மற்றும் அபிவிருத்தி சார்ந்த நடைமுறை முன்னேற்ம் ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

இச்செயலமர்வில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 15 உறுப்பினர்களும்,பதுளை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களும், மாத்தளை மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினரும், கண்டி மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினர் என மொத்தமாக 20 உறுப்பினர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *