சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்துரைப்பு

ஜனாதிபதியினுடைய நிகழ்வுகள் யாவும் எங்களை எல்லாம் ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு மக்களின்

Published January 19, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

ஜனாதிபதியினுடைய நிகழ்வுகள் யாவும் எங்களை எல்லாம் ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தை கண்டும் காணாமல் இருந்துக்கொண்டு ஒரு நிகழ்வுகளாக நடத்துக்கின்ற பொழுது அந்த நிகழ்வுகள் ஒரு ஜே.வி.பியுடைய அல்லது என்.பி.பியுடைய நிகழ்வுகளாகவே காட்சி தருகின்றது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த ஒரு வார காலமாக நடந்த அரசியல் நிகழ்வுகள் சம்பந்தமான ஒரு சமகால கருத்துரையை வழங்கும் நோக்கில் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர்,

தைப்பொங்கலையொட்டி ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். பல நிகழ்வுகளிலே கலந்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த உரிமை அவருக்கு உண்டு. ஆனால் இந்த நிகழ்வுகள் பலவற்றிலே இந்த மண்ணின் உடைய வடக்கு, கிழக்கிலே பெரும்பாண்மையான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கிட்டத்தட்ட 34 உள்ளுராட்சி மன்றங்களின் தலைமைத்துவத்தை நிர்வாகத்தை கொண்டுள்ள எங்களுடைய கட்சி மட்டுமல்ல தமிழ் தேசிய கட்சிகளுடைய எந்த பிரதிநிதியும் இந்த நிகழ்வுகளிலே காணப்படவில்லை.

இவர்களுடைய மேடையை பார்த்தால் எல்லோருமே அரசாங்கத்தினுடைய என்.பி.பி யுடைய பிரதிநிதிகள் அமைச்சர்கள் எம்.பிக்களாகவே காணப்படுகின்றனர். ஆகவே இந்த பல நிகழ்வுகள் அரசாங்க நிகழ்வுகளாக காட்டப்படுகின்றது. ஆனால் உண்மையிலேயே அந்த நிகழ்வுகள் யாவும் எங்களை எல்லாம் ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தை கண்டும் காணாமல் இருந்துக்கொண்டு ஒரு நிகழ்வுகளாக நடத்துக்கின்ற பொழுது அந்த நிகழ்வுகள் ஒரு ஜே.வி.பியுடைய அல்லது என்.பி.பியுடைய நிகழ்வாகவே காட்சி தருகின்றது என அவர் குறிப்பிட்டார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *