பலங்கொட காசியப்ப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட காசியப்ப தேரர்...

Published January 20, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட காசியப்ப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பலங்கொட காசியப்ப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டதோடு, பின்னர் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி மனுவை அழைப்பதற்கும் உத்தரவிடப்பட்டது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *