கேரள கஞ்சாவை கைவிட்டு சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
களனி, அங்கொட வீதிப் பகுதியில் மூன்று பசளை பைகளில் இடப்பட்டிருந்த....
Published January 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
களனி, அங்கொட வீதிப் பகுதியில் மூன்று பசளை பைகளில் இடப்பட்டிருந்த 32 கிலோ கிராம் கேரள கஞ்சாவை களனிப் பிராந்திய குற்ற விசாரணைப் பணியகம் கைப்பற்றியுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்கிடமான மோட்டார் வாகனம் ஒன்றைச் சோதனையிட முற்பட்ட வேளையில், அதிலிருந்த சந்தேக நபர்கள் குறித்த கஞ்சா தொகையைத் வீதியில் கைவிட்டு தப்பிச் சென்ற போதே இந்தக் கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களனிப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்கவின் மேற்பார்வையில், குற்ற விசாரணைப் பணியகத்தின் நிலையப் பொறுப்பதிகாரி எஸ். ரத்நாயக்கவின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்படுகின்றன.