நிலவும் வரட்சி வானிலையில் மாற்றம்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் எதிர்வரும 23ம் திகதிக்கு பின்னர் மாற்றம்
Published January 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் எதிர்வரும 23ம் திகதிக்கு பின்னர் மாற்றம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினமும் வரட்சியான வானிலையே நிலவக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.