காசியப்ப தேரரின் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு!

திருகோணமலை பௌத்த சிலையுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பில், பலாங்கொடை

Published January 22, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

திருகோணமலை பௌத்த சிலையுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பில், பலாங்கொடை காசியப்ப தேரர் உள்ளிட்ட இரு தேரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின் எழுத்துமூல பிரதி மற்றும் அதன் ஒலிப்பதிவை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

தங்களை விளக்கமறியலில் வைக்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக காசியப்ப தேரர் உள்ளிட்ட தேரர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ) மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதன்படி, குறித்த மனுவை மீண்டும் பரிசீலனை செய்வதற்காக இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *