5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி
ஐந்து புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கென தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி
Published January 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஐந்து புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கென தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் 83 கட்சிகள் பதிவுக்கென கோரியிருந்த நிலையில் இதில் 47 கட்சிகளே அதற்கான நேர்முக கலந்துரையாடலுக்க தெரிவு செய்யப்பட்டிருந்தன. இறுதி நேர்முக கலந்துரையாடலின் பின்னர் ஐந்து கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.