முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல்!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (23) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இதன்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து, நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த வழக்கு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்த நீதவான், மேல் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை கிடைக்கும் பட்சத்தில் அங்கு முன்னிலையாகுமாறு சந்தேகநபரான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு உத்தரவிட்டார்.