தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

தெற்கு கடலில் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் ...

Published January 24, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தெற்கு கடலில் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொகையை, ‘தெஹிபால’ என்பவர் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக சந்தேகிப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 11 மீனவர்களைக் கைது செய்ய கடற்படையினரால் முடிந்துள்ளது. 

இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். 

குறித்த கடற்பரப்பில் மேலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக, போதைப்பொருள் கடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நெடுநாள் மீன்பிடிப் படகையும் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். 

அதிலிருந்த மேலும் ஆறு சந்தேகநபர்களையும் இரண்டு செய்மதித் தொலைபேசிகளையும் கடற்படையினர் கைப்பற்றியதுடன், அதில் சுமார் 70 கிலோ கிராம் போதைப்பொருள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதற்கமைய சந்தேகநபர்கள் நாளை கரைக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன், குறித்த போதைப்பொருள் தொகையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் உள்ளதாகச் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *