மதகுருவைத் தாக்கிய 6 பொலிஸார் விளக்கமறியலில்!

கத்தோலிக்க மதகுரு ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கம்பஹா

Published January 26, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கத்தோலிக்க மதகுரு ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு (Identification Parade) ஒன்றை நடத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, பொலிஸார் தன்னைத் தாக்கியதாகக் கூறி கத்தோலிக்க மதகுரு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது குறித்து கம்பஹா பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று (25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள், இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *