நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை ....
Published January 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
நாடு கடத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள பாதாள உலகக்குழுவின் தலைவர்,கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நாளைய தினம் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் .