சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி இன்று
19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண ஒருநாள் கிரிக்கட் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை
Published January 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண ஒருநாள் கிரிக்கட் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை அணி விளையாடும் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் இளையோர் அணியை இலங்கை எதிர்கொள்ளும் நமீபியாவின் வின்ட்ஹோனில் குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகும்.
இரு குழுக்களாக இடம்பெறும் சுப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் குழுவில் இலங்கை விளையாடுகிறது. இதில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.
இரண்டாவது குழுவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், நியுசிலாந்து சிம்பாம்பே உள்ளன.