சட்டவிரோத மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர்
Published January 28, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அராலி பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.