காசியப்ப தேரர் உள்ளிட்டோர் மீண்டும் விளக்கமறியலில்
வண. பலங்கொட காசியப்ப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் மற்றும் 6 பேர் என மொத்தம் 10
Published January 28, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வண. பலங்கொட காசியப்ப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் மற்றும் 6 பேர் என மொத்தம் 10 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.