கொலம்பிய விமான விபத்தில் 15 பேர் பலி

கொலம்பியாவில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published January 29, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கொலம்பியாவில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் அரசிற்கு சொந்தமான Satena விமான நிறுவனத்திற்குரிய விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Beechcraft 1900 எனப்படும் குறித்த விமானம் 15 பேருடன் பயணித்த நிலையில் வெனிசுலா எல்லையிலுள்ள அந்நாட்டின் Ocaña நகரை சென்றடைவதற்கு 11 நிமிடங்களுக்கு முன்னரே விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

விமானத்தின் பாகங்கள் குறித்த நகரை அண்மித்துள்ள மலைப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் தொடர்வதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *