80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் கொள்ளை – சந்தேகநபர் கைது

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம்

Published January 29, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றைத் திருடியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திருட்டுச் சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

அதற்கமைய, நேற்று (28) அதிகாலை கெஸ்பேவ பிரதேசத்தில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால், இந்தக் குற்றச் செயலுக்குத் தேவைப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் 06 கிராம் 235 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் குறித்த கார் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் யட்டகல, ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, எல்பிட்டிய மற்றும் பத்தேகம பொலிஸ் பிரிவுகளில் 02 முச்சக்கரவண்டிகளைத் திருடியமை மற்றும் ஹோமாகம பொலிஸ் பிரிவில் 02 மோட்டார் சைக்கிள்களைத் திருடிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், 07 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, முச்சக்கரவண்டிகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2025.12.12 ஆம் திகதி பிலியந்தல பொலிஸ் பிரிவில் சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்றைக் கொள்ளையிட்ட குற்றத்துடன் தொடர்புடைய இந்த நான்கு சந்தேகநபர்களும், நேற்று முற்பகல் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 23 முதல் 28 வயதுக்கு இடைப்பட்ட இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *