Featured Breaking

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் ரூ. 1,750 ஆக உயர்வு – இன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்தானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை 1,750 ரூபாவாக உயர்த்துவதற்கான

Published January 30, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது இன்று (30) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போதுஇ ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1இ750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது அடிப்படைச் சம்பளத்தை 1இ350 ரூபாவிலிருந்து 1இ550 ரூபாவாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும்இ வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவினை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

அதற்கமையஇ இச்சம்பளத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5இ000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers Breaking and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *