விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு ....
Published January 30, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நாடளாவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சுமார் 29744 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 18 பேரும், சந்தேகத்தின் பேரில் 560 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 297 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 161 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 78 சாரதிகளும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 428 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4473 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.