மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை
உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக ........
Published February 3, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கு அமைய நேற்றைய தினம் 338,600 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (03) 11,000 ரூபாய் அதிகரித்து 349,600 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம் நேற்றைய தினம் 368,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 380,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 130 டொலர் அதிகரித்து 4816 டொலராக காணப்படுகிறது.