ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு

ஹொரணை - கொழும்பு 120 மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் சொகுசு .....

Published February 4, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஹொரணை – கொழும்பு 120 மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் சொகுசு மற்றும் சாதாரண தனியார் பேருந்துகள் நேற்று முன்தினம் (02) ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (04) தொடர்கிறது. 

ஹொரணையில் இருந்து கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை ஊடாக புறக்கோட்டை வரை சேவையில் ஈடுபடுவதற்காக புதிய பேருந்து ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக பேருந்து சங்கங்களுக்கும், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கும் இடையில் நேற்று (03) மாலை கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

இதன்போது, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைத் தலைவர் நிராகரித்த காரணத்தினால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

இதன் காரணமாக, இன்றைய தினமும் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *