அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு கிரிக்கெட் அணிகள் இலங்கை வருகை
2026 இலங்கையில் நடைபெறவுள்ள உலக இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக
Published February 4, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
2026 இலங்கையில் நடைபெறவுள்ள உலக இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு கிரிக்கெட் அணிகளும் நேற்று முன்தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 32 அதிகாரிகளும் வீரர்களும், அவுஸ்திரேலிய அணியில் 27 வீரர்களும் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 8.D.-510 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தது.