இலங்கை தொழிலாளர்களை பாராட்டிய கொரியா

கொரியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கும்

Published February 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கொரியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு பாராட்டுக்குரியது என கொரிய பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் லீ ஹக்-யோங் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுனில் ஹந்துநெத்தியுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள கொரிய பாராளுமன்ற பிரதி சபாநாயகரை அமைச்சர் சந்தித்து உரையாடியானர்.

இதன்போது கொரிய தொழில், சந்தையில் இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் மிகவும் நன்கு பயிற்சி பெற்ற தொழிலாளர் படை இருப்பதாகவும், அவர்கள் கொரியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்குவதாகவும் கொரிய பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *