‘குஷ்” போதைப்பொருளைக் கடத்த முயன்ற நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுள்ள 'குஷ்"

Published February 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுள்ள ‘குஷ்” போதைப்பொருளைக் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.

இவர் இன்று அதிகாலை 12:50 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-319 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.

இவரது பயணப் பொதியில் (Suitcase) மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 10 கிராம் “குஷ்” வகையைச் சேர்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிலுள்ள அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *