அனுஷ பெல்பிட்ட மீண்டும் விளக்கமறியலில்
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், இலங்கைத் தொலைத்தொடர்புகள் ......
Published February 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட , எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (06) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரது விளக்கமறியல் காலத்தை மேலும் நீடிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.