கண்டியில் நாளை 22 மணிநேர நீர்வெட்டு
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை காலை முதல் .......
Published February 7, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை காலை முதல் 22 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது.
குறித்த நீர்வெட்டு நாளை காலை 6.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.