வாகன இலக்கத் தகடுகள் அச்சிடுவதற்கான திட்டம் ஆரம்பம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்க .........

Published February 8, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளுக்காக கேள்வி மனுக்கள் கோரப்பட்ட பின்னர் நிறுவனமொன்றுக்கு அது வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் அது தொடர்பான பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெரவில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்துடன் இணைந்து வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது. 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *