அரசியல் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 ஆண்டுகள் பூர்த்தி
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் .....
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் ஆசி வேண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் பெப்ரவரி 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் பல்வேறு விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில், மஹாசென் தேவாலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அஷ்டபலபோதியவில் விசேட சமய அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் புனித அரச மரத்திற்கு ‘அட்டபிரிகரை’ வழங்கி வைக்கப்பட்டது.
சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, கிரிவெஹெர தூபிக்கான விசேட வஸ்திர (கப்ருக்க ) பூஜை இடம்பெற்றது. பின்னர், சர்வராத்திரியப் பிரித் பாராயணம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்குப் பிரிகர மற்றும் காலை நேரத் தானம் வழங்கி வைக்கப்பட்டு ஆசிகள் பெறப்பட்டன.