இலங்கைக்கு அரிசி நன்கொடை வழங்கிய மியன்மார் அரசு

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு..........

Published February 9, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மியன்மார் அரசினால் 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இதனை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டார். இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தன் டயிக் அவர்களினால் அரிசி நன்கொடை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

மியன்மார் அரசாங்கம் ஏற்கனவே புயல் அனர்த்த நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக குறித்த அரிசி நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *