தொடரும் மீனவர்களின் சத்தியாகிரக போரட்டம்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரக ..........
Published February 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (09) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் மூலம் மீன்பிடிப்பதற்கான தடையை நீக்கக் கோரி, மீனவர்கள் 5 ஆம் திகதி முதல் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அவை தோல்வியடைந்த காரணத்தினால், இவ்வாறு தொடர்ச்சியாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குறித்த மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.