LATEST
விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!
உள்ளூர்

5 வயது மகளைத் தாக்கிய தந்தை கொழும்பில் கைது

February 10, 2026 · Tamil Ceylon LK

தனது 5 வயது மகளைக் கொடூரமாகத் தாக்கி, அதனை காணொளி எடுத்து வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி மாதம்பிட்டிய பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் கொழும்பு 15இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை கைது செய்யச் சென்ற போது, அங்கு இருந்த பெண் ஒருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளார். இதனையடுத்து, பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

மேலும் ›