விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி
விசேட தேவையுடையோருக்கென விசேடவிதமாக வடிவமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பஸ்
Published February 10, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
விசேட தேவையுடையோருக்கென விசேடவிதமாக வடிவமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதிவளத்தை பயன்படுத்தி இவ்வாறு 10 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதமளவில் பஸ்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.